Friday, October 17, 2014
லக்சம்பர்க்::புலிகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனை எதிர்த்து புலிகள் இயக்கம் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதில், புலிகள் மீதான கட்டுப்பாடுகள் தற்போது பொருத்தமற்றவை என்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு 3 மாதங்களுக்குப் பின் அமல்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதுபற்றிய யோசனைகளை 2 மாதங்களுக்குள் அளிக்கலாம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.
புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு மூன்று மாத காலத்தில் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களின் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என அந்த அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது என கிறிஸ்டஃபர் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய
புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.

No comments:
Post a Comment