Sunday, October 5, 2014

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை சம்பந்தமான பொய்யான விடயங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பித்தது: திவயின!

Sunday, October 05, 2014
இலங்கை::சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை சம்பந்தமான பொய்யான விடயங்கள் அடங்கிய 40 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாரதூரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி கிடைக்காமல் நாடு திரும்பியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
திவயின பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 
மனித உரிமைகளுக்காக செயற்படும் அமைப்புகள் இலங்கை தொடர்பாக வெளியிடும் அறிக்கைகளையும் அதில் உள்ளடக்கப்படும் விடயங்களையும் திவயின பத்திரிகை பொய்யானது என்று தெரிவித்தே தனது செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாக திவயின வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment