Pages

Wednesday, October 15, 2014

தமிழீழ கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை: (புலி பினாமி) எம்.ஏ.சுமந்திரன்!!

 Wednesday, October 15, 2014தமிழீழ கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் (புலி பினாமி) எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்யத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே சுமந்திரன், புலிகளின் ஈழக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அதிகாரம் பகிரப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment