Wednesday, October 8, 2014

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பாதுகாப்பு வீரர்கள் பலி!!

Wednesday, October 08, 2014
சென்னை::சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக விஜய் பிரதாப் சிங் என்பவர் பணி புரிந்து வருகிறார். அவர், புதன்கிழமை (08.10.2014) அதிகாலை தன்னுடைய சக ஊழியர்களான கணேசன், சுப்புராஜ், மோகன்சிங் ஆகியோர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். 

துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் கோவர்த்தன பிரசாத், பிரதாப் சிங் ஆகியோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து துப்பாக்கிசூடு நடத்திய விஜய் பிரதாப்சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் பிரதாப் சிங் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். அணுமின் நிலையத்தில் தங்கும் விடுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீஸ் சூப்ரடெண்ட் சி.விஜயகுமார் கூறுகையில், இந்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய விஜய் பிரதாப் சிங்கை கைது செய்து விசாரித்து வருகிறோம். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றார்.'
 
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேசன், சேலத்தைச் சேர்ந்தவர். சுப்புராஜ் மதுரையைச் சேர்ந்தவர். மோகன்சில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment