Pages

Monday, October 13, 2014

24 வருடங்களின் பின்னர் யாழிற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!



Monday,October, 13, 2014
இலங்கை::
சுமார் 24 வருடங்களின் பின்னர் யாழிற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

யாழ் தேவியினை காண்பதற்கு வீதியோரங்களில் ஆயிரக்கனக்காண மக்கள் பார்வையிட்டதுடன் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை கையசைத்து உற்சாகத்துடன் யாழ்தேவியினை வரவேற்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையமும் ஜனாதிபதியினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது. 

பளை ரயில் நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 10.9 சுபமுகூர்த்த வேளையில், யாழ் தேவியில் ஏறி அமர்ந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், ஆயிரக்கணக்கான மக்களுடன் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர். 

இந்திய அரசின் நிதியுதவில் இலங்கை ரூபாய்ப்படி 10,400 கோடி ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்ட நிலையில், யாழ்தேவி தனது உத்தியோகபூர்வ பயணத்தை இன்று மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
 
மேலதிக படங்கள் விபரங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்:-

No comments:

Post a Comment