Pages

Monday, October 13, 2014

பாண்டிச்சேரியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்கள் தொடர்பான வழக்கு நாளை!

Monday,October, 13, 2014
சென்னை::பாண்டிச்சேரியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்கள் தொடர்பான வழக்கு நாளை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

இந்த விசாரணையின்போது அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு அப்பால் வைத்து அகதிகளை இடைமறித்து நாடு கடத்தமுடியுமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
 

கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி இந்த அகதிகள் படகு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் வைத்து இடைமறிக்கப்பட்டது.

இதன்பின்னர் சுமார் ஒரு மாதக்காலம் குறித்த அகதிகள் நடுக்கடலில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டனர்

பின்னர் அவர்கள் நாவுறு தீவுக்கு அனுப்பப்பட்டனர்

இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலிய நீதிமன்றம் முன்னிலையாகவுள்ளார்

No comments:

Post a Comment