Pages

Monday, June 9, 2014

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை!

Monday, June 09, 2014
இலங்கை::இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்திய தூதரக அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புக்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்திய அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment