Pages

Monday, June 9, 2014

களுத்துறை – பேரூவளை பிரதேசத்தில் இந்திய பிரஜை கைது!

Monday, June 09, 2014
இலங்கை::
களுத்துறை – பேரூவளை பிரதேசத்தில் வல்லாப்பட்டையை கொண்டுச் சென்ற இந்திய பிரஜை உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்படும் போது குறித்த இந்தியரிடம் இருந்து 3 கிலோகிராம் வல்லாப்பட்டடை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 15 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இவர்கள் இன்றைய  தினம் களுத்துறை நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளார்.

No comments:

Post a Comment