Pages

Wednesday, June 18, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டியவை: (கழுதை புலி) சம்பந்தன்!

Wednesday, June 18, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக்  புலி கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.(கழுதை புலி) சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இந்த விசாரணைக் குழு நிறுவப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் பாராளுன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் விசாரணைகளை நாட்டுக்கு எதிரானதாக நோக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நாடு முழுவதிலும் வியாபித்துள்ளதாகவும் அதற்கு எதிராகவே விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிவேரிய, முள்ளிவாய்க்கால் மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில்  அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பல காரணிகளினால் ஐக்கிய நாடுகள் விசாரணையை பூரணமாக வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமது கட்சியின் கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடும் என்ற நம்பிக்கை தமக்குக் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைப் பொறிமுறைமை சர்வதேச தரத்தில் அமையவில்லை எனவும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment