Sunday, June 15, 2014
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இன்று பூடான் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து இரு நாட்டு உறவுகள் குறித்து தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பிரதமராக நரேந்திர மோடி கடந்த மாதம் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அப்போது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களுக்கும், உலக நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் சார்க் நாட்டு தலைவர்கள் உள்பட உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பாகவே முதல் வாழ்த்தாக பூடான் நாட்டு பிரதமர் ஷெரிங் தோப்கே தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே நீண்ட காலமாக பூடான் இந்தியாவுடன் நட்பு நாடாக இருந்து வருகிறது.
மேலும் கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளும், வர்த்தக உறவுகளிலும் இரு நாடுகளும் தொடர்ந்து நட்பு நாடாக விளங்கி வருகின்றன. பிரதமராக மோடி பதவியேற்றதும் அவருக்கு உலக நாட்டு தலைவர்கள் தங்களது நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இருந்த போதும் பூடான் நாடே மோடியின் முதல் தேர்வாக உள்ளது. மோடியின் பூடான் பயணம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் கூறுகையில், பூடானுடன் நமது நட்பு தனித்துவம் மிகுந்தது. கலாச்சாரம் மற்றும் வரலாற்று பூர்வமானது. பூடானில் கல்வி, வளர்ச்சி, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா பங்களிப்பு செய்துள்ளது. அந்நாட்டின் 11வது 5 ஆண்டு திட்டத்திற்காக சுமார் ரூ.4500 கோடி வரை கடனுதவி அளிக்க நமது அரசு உறுதி அளித்துள்ளது. மேலும் பூடானில் நீர் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா முதலீடு செய்துள்ளது என்றார்.
சமீபகாலமாக சீனா பூடானில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த முயன்று வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலமாக பூடான் இந்திய உறவு வலுப்பெறும். பூடான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் உடன் சென்றனர். இன்று தனி விமானம் மூலம் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து பாரோவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பாரோ விமான நிலையத்தில் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்ட அதிகாரிகள் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அதற்கு முன்னதாக இந்த பயணம் குறித்து நேற்று இரவு நரேந்திர மோடி நிருபர்களிடம் கூறுகையில், எனது முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் அமைந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பூடானுடனான சிறப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள பயணம் தனித்துவம் மிக்கதாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகள் மேம்படும் வகையில் எனது இந்த முதல் வெளிநாட்டு பயணம் அமையும் என்று நம்புகிறேன். ஏற்கனவே நம்மோடு நட்பு கொண்டுள்ள பூடானுக்கு செல்வதில் ஆழ்ந்த விருப்பமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இருநாடுகளின் உறவு மற்றும் வளர்ச்சி குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறேன். மேலும் இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் கலாச்சாரங்களை பரிமாறிக் கொள்வது குறித்தும் விருப்பங்களை தெரிவிப்பேன். பூடான் இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடாகும் என்றார். மேலும் இந்த பயணத்தின் போது பூடானில் பிரதமர் ஷெரிங் தோப்கே, மன்னர் ஜிக்மே கேசார் நமக்யால் வாங்சுக் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் நாடாளுமன்றம் மற்றும் பிரதிநிதிகள் சபை அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பூடான் எதிர்கட்சி தலைவரையும் இந்த பயணத்தின் போது சந்தித்து பேசுவார் என தெரிகிறது.
இந்தியா உதவியுடன் பூடானில் அமைந்துள்ள சுப்ரீம் கோர்ட் வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் இந்திய முதலீட்டுடன் பூடானில் கோலோன்சுவில் அமைய உள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார். மேலும் இந்தியாவுக்கு தேவையான மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளும் வகையில் பூடான் இந்திய உறவு அமைய வேண்டும் என்பதில் விருப்பம் உடையவனாக இருக்கிறேன். அந்நாட்டு தலைவர்களுடனான பேச்சு வார்த்தையின் போது கல்வி குறித்த தொடர்புகள் முக்கியமாக இடம் பெறும் என்று நேற்று இரவுபேட்டியின் போது மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment