Pages

Sunday, June 15, 2014

யாழ். சுதுமலை பெண் கொலை : ஐவர் கைது!

Sunday, June 15, 2014
இலங்கை::யாழ். சுதுமலை வடக்கில்  சனிக்கிழமை (14) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு டையவர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மானிப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண் கொழும்பில் வசித்த நிலையில், சுதுமலை அம்மன் ஆலயத் திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.
 
நேற்று முன் (13) இரவு ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, நேற்று (14) அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து, வீட்டிலிருந்த இரண்டு பெண்களையும் கை, கால்களை கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
 
இது தொடர்பிலே குறித்த ஐவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment