Pages

Thursday, June 12, 2014

ஐ.நாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என இலங்கைஅரசு சவால்விடமுடியாது அதிலிருந்து தப்பவும்முடியாது: சம்பந்தன்!

Thursday, June 12, 2014
இலங்கை::இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும்- தமிழ் மக்களின் சார்பாகவும் தான் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன்- கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றிலிருந்தே மேற்படி விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று இலங்கை அரசு பகிரங்கமாகத் கூறிவருவதாகவும் கூறினார்.

போர் நிறைவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில்- நம்பகரமான சுதந்திரமான ஒரு சுயாதீன விசாரணையை உள்நாட்டில் நடத்தியிருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று இலங்கை அரசு சவால் விட முடியாது என்பதுடன் அதிலிருந்து தப்பவும் முடியாது என சுட்டிக்காட்டிய சம்பந்தன்- ஐ.நா. கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment