Pages

Friday, June 13, 2014

புலம் பெயர்ந்த புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் இருப்பை தக்கவைக்கவே இலங்கை மீது பொய் பிரசாரம்:பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Friday, June 13, 2014
இலங்கை::இராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின் றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை. இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தமது கல்வி உட்பட சகல நடவடிக் கைகளையும் சுதந்திரமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதன் காரணமாகவே அவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சுதந்திரமாக நடத்த முடிந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். எனவே, இராணு வத்தினரால் அச்சுறுத்தல்கள் விடுக்க ப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக கூறினார்.
 
வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழ்ந்து வரும் நாடுகளில் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இலங்கையில் பிரச்சினை உள்ளது என்று காண்பிக்க முயற்சிப்பதாக
 
வடக்கு, கிழக்கு. உட்பட நாட்டில் தற்பொழுது சுமுகமான நிலைமை காணப்படுகின்ற போதிலும் தமது சுயலாபத்தை கருத்திற்கொண்டு இவர்கள் பல்வேறு பொய்யான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி யிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்றது. இதன் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்:
இலங்கையில் தற்பொழுது அமைதியான சூழல் காணப்படுவதால் இலங்கை தொடர்பில் உண்மை நிலைமைகளை தமது தூதரங்கள் ஊடாக அறிந்த பல நாடுகள் அகதி அந்தஸ்து பெற்று வாழும் பலரை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன.
 
இதனால் தமது சொகுசு வாழ்க்கை, தமது பிள்ளைகளில் கல்வி நடவடிக்கை பாதிப்படையும் என்ற அச்சத்தின் காரணமாக வடக்கில் பெண்களுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றும் சுமுக நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment