Pages

Monday, June 9, 2014

பொருளாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மாதாந்த மீளாய்வுக் கூட்டம்!

Monday, June 09, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் மாதாந்த செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது.

இதில், மாவட்ட திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திட்டமிடல் பிரிவு கணக்காளர் எம்.எஸ்.பசீர், பிரதிப்பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது, பொருளாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

முக்கியமாக கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், கிராமியப்பாடசாலை அபிவிருத்தித்திட்டம், விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், தேசத்திற்கு மகுடம், இந்தி யவீடமைப்புத்திட்டம், பாலங்களின் வேலைகள், ஐரோப்பிய யூனியன் வேலைத்திட்டம், திவிநெகும, மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டங்கள், மனைப் பகுப்பாய்வு உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை அது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியனால் வறட்சி தொடர்பான செயற்திட்டங்கள் குறித்து பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment