Pages

Monday, June 9, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை!

Monday, June 09, 2014
இலங்கை::ஆரையம்பதியில் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம்திகதி இரவு எங்களது தோட்டத்திற்குள் சென்ற கணவர் வீட்டுக்கு மறுநாள் வரவில்லை. அங்கு சென்று பார்த்தபோது, வேலிக் கம்பியை வெட்டிவிட்டு வந்த விசேட அதிரடிப்படையினர் என் கணவரையும் என் சகோதரரையும் பிடித்துச் சென்றுள்ளனர்ன ஆரையம்பதி திருமதி தனபாலசிங்கம் என்பவர்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் இப்பிரிவிலிருந்து கிடைத்த விண்ணப்பங்களை காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் இம்முறை கடந்த 06ஆம்திகதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது. இரண்டு நாட்கள் காத்தான்குடியில் விசாரணைகளை நடத்தியதைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் விசாரணைகளை நடத்தப்பட்டது.

இதன்போது வழங்கப்பட்ட சாட்சியங்களின் சில தொகுப்புகள்

இங்கு சாட்சியமளித்த திருமதி குணசிங்கம் அவரது சாட்சியத்தில்,

வீட்டிலிருந்து பழைய வீதுpயிலுள்ள (பழைய கல்முனை வீதி) முருகன் ஆலயத்திற்கு சம்பவ தினம் மாலை சென்றார்.  அப்போது வெடிச்சத்தம் கேட்டது. அதன் பின்னர் நாங்கள் அந்த இடத்திற்குப் போனவேளை அருகிலிருந்த கடையில் நின்றவர்கள் என்கணவரை சுட்டு ரக் வண்டியில் ஏற்றிப் போவதாகச் சொன்றார்கள்.

ஒரு சீ.ஐ.டி வானும், ஆமி ரக் வண்டியும் அப்போது கொஞ்சத்தூரத்தால் போய்க் கொண்டிருந்தது. முகாமில் போய்க் கேட்டும் ஒரு பிரயோசனமும் இல்லை. காத்தான்குடி பொலிசுக்கும், கிராம சேவையாளருக்கும் முறையிட்டேன். அதன் பின்னர் பிரதேச செயலாளருக்கு கிராம சேவையாளர் அறிவித்ததையடுத்து அவர் விசாரணை செய்து அதன் பின்னர் மரண சான்றிதழ் கொடுத்தார். ஆனால் என்கணவரின் சடலத்தையோ அவரையோ யாரும் இன்னமும் தரவில்லை என தெரிவித்தார்.

நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில், காத்தான்குடியில் காணாமல் போனவர்கள், வந்தாறுமூலையில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், கொம்மாதுறை முகரில் இறக்கி எடுக்கப்பட்டவர்கள் எனப்பலரது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன்.

ஆரையம்பதி திருமதி தனபாலசிங்கம் சாட்சியம்,

ஆரையம்பதியில் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம்திகதி இரவு எங்களது தோட்டத்திற்குள் சென்ற கணவர் வீட்டுக்கு மறுநாள் வரவில்லை. அங்கு சென்று பார்த்தபோது, வேலிக் கம்பியை வெட்டிவிட்டு வந்த விசேட அதிரடிப்படையினர் என் கணவரையும் என் சகோதரரையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் சப்பாத்துக்கால் அடையாளம் இருந்ததைக் கொண்டே நாங்கள் அவ்வாறு நினைத்தோம். நாங்கள் மண்முனையில் இருந்த விசேட அதிரடிப்படை முகாமில் போய்க் கேட்டபோது அவர்கள் தாங்கள் அழைத்து வரவில்லை ஆரையம்பதி முகாமில் கேளுங்கள் என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது மண்முனையைச் சொன்னார்கள்.

அங்கு போன போது தோட்டத்தில் கிடந்த ஒரு ரோச் லைட்டையும் நாங்கள் கொண்டு சென்றோம். அவர்கள் தங்களது இல்லை என்றும் ஆரையம்பதிக்குப் போகுமாறும் சொன்னார்கள்.  அந்தக்காலத்தில் மண்முனை விசேட அதிரடிப்படை முகாமில் மடக்கும்புர என்பவர்தான் அதிகாரியாக இருந்தார்.
ஆரையம்பதி விசேட அதிரடிப்படை முகாமில் ரோச் லைட்டையும் கொண்டு சென்று கேட்டபோது தாங்கள் என்கணவர் மற்றும் சகோதரரைப்பிடிக்கவில்லை என்றும் தேடிப்பார்ப்பதாகவும்தான் சொன்னார்கள்.

மூன்று மாதமாக தேடிப்பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்து சந்தோசமாகப் பேசிக்கொண்டு இருந்த அரையம்பதியிலிருந்த விசேட அதிரடிப்படை அதன்பின்னர் தாங்கள் என்கணவரையும் என் அண்ணனையும் கூட்டிச்செல்லவில்லை என்று சொன்னார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தோம்.

எங்களது கணவர் தொடர்பில் எந்தவிதமான தகவலும் இதுவரையில் இல்லை. இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறோம். புலிகளுடன் எந்தத் தொடர்பும் அவர்களுக்கிருக்கவில்லை.

என் கணவர் கிருஸ்ணப்பிள்ளை தனபாலசிங்கம், என் அண்ணன் பனிக்கப்போடி குருகுலசிங்கம் இருவரும் இன்னும் கிடைக்கவில்லை தகவல்களும் இல்லை என்றார்.

 தாளங்குடாவைச் சேர்ந்த கந்தப்போடி சகாயமேரி,

என்கணவரை மண்முனைத்துறையில் வைத்து விசேட அதிரடிப்படைய சுட்டது எனக்கு கணவர் இல்லாததால் எனது மகனை அவரது பெரிய புல்லுமலையிலிருந்த  சித்தப்பாவிடம் விட்டிருந்தேன்.

அங்கு அவர் வேலைகளைச் செய்து வந்தார். அவர் சித்தப்பா குடும்பத்துடன் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் இடம் பெயர்ந்து மைலம்பாவெளியில் இருந்த அகதி முகாமிற்கு தங்கியிருந்தார்.

அங்கிருந்த வேளை 25 ஏப்ரல் 2007 அன்று முகாமிலிருந்து வெளியே வந்த போது அங்கு சுற்றி வளைத்திருந்த இராணுவம் எனது மகளை கணகளைக்கட்டி அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் என்மகன் இன்னும் எனக்குக்கிடைக்கவில்லை. இராணுவம் தான் எனது மகளை கண்களைக்கட்டி அழைத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இன்னமும் ஒரு தகவலுமில்லை. நீங்கள் தான் வழியைச் சொல்லவேண்டும் எனக் கேட்டார்.

ஆரையம்பதி - தியாகராசா கமலேஸ்வரி

91ஆம்ஆண்டு மார்ச் மாதம் 24ஆம்திகதி என்னுடைய கணவர் ஆரையம்பதியிலுள்ள எங்களது வீட்டில் இருந்து மீன் வியாபாரத்துக்காகச் சென்றார். வழமையாக மாலையில் வீட:டுக்கு வருபவர் அன்றையதினம் வரவில்லை. அக்காலத்தில் வெளியில் செல்வதென்றாலே பயம்.
நாங்கள் தேடினோம் ஆனால் எந்தத் தகவலும் இல்லை. 2 மாதத்துக்குப்பிறகு அவருடன் மீன்வியாபாரத்துக்குச் சென்ற காத்தான:குடியைச் சேர்ந்த ஒருவர் கொம்மாதுறை இராணுவ முகாமில் என்கணவரைப்பிடித்ததாகச் சொன்னார். இப்போது அவர் இருந்தால் 56 வயதாக இருக்கும். ஆனால் அவர் இன்னமுமு; இல்லை. பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் எந்தத் தகவலும் இல்லை.

ஆரையம்பதி - கைலாயப்பிள்ளை குணநாயகி,

எனது மகன் குகதாசனுக்கு 22 வயது, 2006 மார்கழி மாதம் 17ஆம் திகதி கொழும்புக்குப் போவதற்காக பஸ் புக் பண்ணக் காத்தான்குடிக்குப் போனார். திரும்பி வீட்டுக்கு வரவில்லை. மறுநாளிலிருந்து தேடினோம். புடிபட்டார் என்று சொன்னார்கள் யார் பிடித்ததென்று ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் கருணா குழுவின் சாந்தன் பிடித்ததாகச் சொன்னார்கள்.

சாந்தனுக்கு ஆரையம்பதியில் அலுவலகம் இருந்தது. அங்கு எனது மகனை வைத்திருந்ததாகவும் சிலர் சொன்னார்கள் நாங்கள் அங்கு சென்று கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டார்கள். என்மகனுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இன்னமும் என்மகன் வரவில்லை.

ஆரையம்பதி சோமசுந்தரம் கமலாவதி

எனது இரண்டு மகள்களும் இல்லை. ஒருவர் எஸ்.சோமகாந்தன், உயர்தர வகுப்பு ரியூசன் வகுப்புக்காக 91ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 17ஆம்திகதி ஆரையம்பதியிலிருந்து காலை 6 மணிக்கு சைக்கிளில் சென்றார். வீடு திரும்பவில்லை. காத்தான்குடிக்குள் தான் கடத்தியதாகச் சொன்னார்கள். அங்குபோய் யார் தேடுவது.

மற்றைய மகன் தயாபரன், இவரை வீட்டில் இருந்த வேளை அதே வருடத்தில் வீட்டில் இருந்த வேளை ஆயுத்தங்களுடன் வந்தவர்கள் கையைப் பிடித்து விசாரணைக்கென்று அழைத்துச் சென்றார்கள். இன்னமும் இல்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டேன் எந்தத் தகவலும் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணாமல்போனேர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இம் மாதம் 6ஆம்திகதி முதல் 9ஆம்திகதி வரையில் நடைபெறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு வெள்ளிக்கிழமை(6) காலை ஆரம்பமானது.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது.

இந்த அமர்வு இன்று திங்கட் கிழமை வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகிறது.  இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment