Pages

Monday, June 9, 2014

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 74 தமிழக மீனவர்கள் கைது!

Monday, June 09, 2014
இலங்கை::இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 74 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 32 இந்திய மீனவர்கள் எட்டு விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் மேலும் 42 தமிழக மீனவர்கள் காங்கேசன் துறையில் வைத்து எட்டு விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். சட்ட விசாரணைகளுக்குப் பின்னர் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment