Pages

Monday, June 9, 2014

பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு புகுந்து பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு 10 பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் என 23 பேர் பலி!

Monday, June 09, 2014
கராச்சி:பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு புகுந்து பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு 10 பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் என  பேர் பலியாகியுள்ளனரமேலும் இரு விமானங்களும் சேதமடைந்தது.கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் புகுந்த 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை போல போலியான அடையாள அட்டையை காட்டி உள்ளே புகுந்துவிட்டனர்.
பின்னர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியானார்கள். பயங்கரவாதிகள் மேலும் கையெறி குண்டுகள் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அப்பகுதியை சுதாரித்து சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளையும் சீல் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை:கடுமையான சோதனைக்கு பின்னர் தான் மீட்பு படையினர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே வேளையில் விமான போக்குவரத்து முற்றிலும் அங்கு நிறுத்தப்பட்டுவிட்டது.அங்கு வரும் அனைத்து விமானங்களும் மற்றொரு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாதுகாப்பு படையினரிடம் பயணிகளை பத்திரமாக மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment