Pages

Wednesday, April 23, 2014

புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை குறித்து அரசாங்கம் நாளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

Wednesday, April 23, 2014
இலங்கை::புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை குறித்து அரசாங்கம் நாளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விளக்கத்தை அளிக்க உள்ளார்.
புலிகளுக்கு ஆதரவான பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை தொடர்பில் நாட்டின் சகல இராஜதந்திரிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
புலிகள் அமைப்பை மீளவும் இயங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 40 நபர்கள் தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விளக்கம் அளிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment