Pages

Wednesday, April 23, 2014

அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற 25 பேர் நாடுதிரும்பினர்!

Wednesday, April 23, 2014
இலங்கை::அகதி அந்தஸ்து கோரி ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற போது கைது செய்யப்பட்டு அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
 
 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களில் 22 தமிழர்களும் இரு சிங்களவர்களும் முஸ்லிம் ஒருவரும் அடங்குகின்றனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசார
ணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
 அகதிகள் தொடர்பான சர்வதேச அமைப்பினால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment