Friday, April 25, 2014

புலிகளை மீள ஒருங்கிணைக்கும் கோபியன் உறவினர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் யாழில் கைது!

Friday, April 25, 2014
இலங்கை::புலிகளை மீள ஒருங்கிணைக்கும் தலைவர்களில் ஒருவராக அரசினால் அறிவிக்கப்பட்டு, அண்மையில் நெடுந்தீவில் சுட்டுக் கொல்ப்பட்ட கோபியன் உறவினர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் நகரை அண்மித்துள்ள குருநர் கடற்கரை வீதியைச் சேர்ந்த அருளானந்தம் தினேஸ்குமார் என்பவரே அவரது வீட்டில் வைத்து நேற்று வியாழக்கிமை கைது செய்யப்பட்டார்.
 
தாவது, புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டு அண்மையில் நெடுங்கேணியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
இவரைக் கைது செய்ய பயங்கரவாதப் பிரிவினர் கொழும்பு பயங்கரவாதப் பிரிவினரின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment