Friday, April 25, 2014

'மோடி மாலையிட்டதால் தீட்டு' மாளவியா சிலையை கங்கை நீரால் கழுவிய சமாஜ்வாடி தொண்டர்கள் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!!

Friday, April 25, 2014
வாரணாசி::பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மாலையிட்ட மதன் மோகன் மாளவியா சிலைக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறி, கங்கை நீரில் சிலையை சமாஜ்வாடி தொண்டர்கள் கழுவி சுத்தப்படுத்தினர்.
 
இதனால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி. மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வதோதராவில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். வாரணாசியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக நகரில் மைய பகுதியில் உள்ள மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகா சபா முன்னாள் தலைவருமான மதன் மோகன் மாளவியா சிலைக்கு மோடி மாலை அணிவித்தார். மோடி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வாரணாசியில் இருந்து புறப்பட்டு சென்ற பின்,
 
மாளவியா சிலையை சமாஜ்வாடி தொண்டர்கள் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்தனர். மோடி ஒரு மதவாதி என்றும் அவர் தொட்டதால் மாள்வியா சிலை தீட்டு பட்டுவிட்டதாகவும் சிலையை புனிதப்படுத்தவே கங்கை நீரில் சுத்தம் செய்ததாகவும் சமாஜ்வாடி தொண்டர்கள் கூறினர். மதன் மோகன் மாளவியா பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர். தீவிர இந்துத்துவா கொள்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment