Friday, April 11, 2014
இலங்கை::வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது நிகழ்வுக்குத் தலைமை வகித்த பதில் தலைவர் கே.கெளரிகாந்தனுக்கும், முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசனுக்கும் இடையில் வாக்குவாதம் உச்சக்கட்டம் வரை நடந்தது.
இலங்கை::வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது நிகழ்வுக்குத் தலைமை வகித்த பதில் தலைவர் கே.கெளரிகாந்தனுக்கும், முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசனுக்கும் இடையில் வாக்குவாதம் உச்சக்கட்டம் வரை நடந்தது.
ஒருகட்டத்தில் முன்னாள் தவிசாளர் ஜெபநேசனை சபையை விட்டு வெளியேறுமாறும், தவறும் பட்சத்தில் அவர் வெளியேற்றப்படுவார் என்றும் பதில் தலைவர் கெளரிகாந்தன் எச்சரித்தார்.
ஆனால் பதில் தலைவரின் மிரட்டலுக்கு அஞ்சாத உறுப்பினர் சபையை விட்டு வெளியேற மறுத்ததுடன் கூட்டம் முடியும் வரை மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான கூட்டம் பதில் தவிசாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் சபை மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
காலையிலிருந்து மதியம் வரை பதில் தவிசாளர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மதிய இடைவேளைக்குப் பின்பு பதில் தவிசாளர் சமுகமளிக்காததினால் சக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆளும் கட்சி உறுப்பினர் கே.கெளரிகாந்தன் பதில் தலைவராகப் பதவியேற்றார்.
அக்கூட்டத்தில் அடைக்கல நாயகி வீதியின் அபிவிருத்தி வேலை பற்றி ஆராயப்பட்ட போது முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான அ.ஜெபநேசனுக்கும் பதில் தலைவர் கே.கெளரிகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வாக்குவாதமாக மாறி உச்சக் கட்டத்தை அடைந்தது. அமைதியை நிலைநாட்ட முற்பட்ட பதில் தலைவர் "நீர் உரையாற்றி முடிந்துவிட்டது. ஆசனத்தில் அமருங்கள்." என மூன்று தடவை தொடர்ந்து கூறினார். ஆயினும் உறுப்பினர் ஜெபநேசன் ஆசனத்தில் அமராமல் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
இதையடுத்து, ஆவேசத்திற்குள்ளான பதில தமைலவர் சபையை விட்டு வெளியேறுமாறும் தவறும் பட்சத்தில் வெளியேற்றப்படுவீர் என்றும் உறுப்பினரை மிரட்டினார். பதில் தலைவரின் மிரட்டலுக்கு மசியாத ஜெபநேசன் கூட்டம் முடியும் வரை சபையில் அமர்ந்திருந்தார்.
இருவருமே ஆளும் தமிழ்த்தேசியக் புலிகூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே முன்னாள் தவிசாளர் தமது தவிசாளர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment