
Monday, April 21, 2014
இலங்கை::புலிகள் மீள ஒருங்கிணையவில்லை என (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ புலிகள் இராணுவ ரீதியாக மீள ஒருங்கிணையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் மீள ஒருங்கிணைவதாக கூறப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கருத்துக்களுக்கு பதிலளித்து தமது சக்தியையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுரேஷ் பிரேமசந்திரன், ஆனந்தி சசிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் தோல்வியடைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைமையைப் பின்பற்றி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment