Pages

Monday, April 21, 2014

வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்பிடம் இருந்து பணம் பெற்ற வவுனியா வர்த்தகர் கைது!

Monday, April 21, 2014
இலங்கை::வெளிநாடுகளில் உள்ள  புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டி வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
வவுனியா நகரில் உள்ள இந்த வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும்  காவல்துறையினர் முத்திரையிட்டு மூடியுள்ளனர். இந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியில் கனடா, இந்தியா, ஏனைய பல நாடுகளில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக  காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
இவர்கள் புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர்கள் அல்லது  புலிகளின் செயற்பாட்டாளர்களினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவு தமிழர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள மேலும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment