Monday, April 21, 2014

கூச்சல் குழப்பங்களுடன் பொது இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Monday, April 21, 2014
இலங்கை::கூச்சல் குழப்பங்களுடன் பொது இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.அரச செயலகத்தில் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2.45 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

காணி  தொடர்பிலான மத்திய அரசின் சடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்குதல் மற்றும் யாழ்.பலாலி ஆசிரியர் கலாசாலையை மீண்டும் அதே இடத்தில் தொடங்கி செயற்பாடுகளை முன்னெடுத்தல் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் இடையில் பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. காணிச்  நடவடிக்கை தொடர்பில் மத்திய அமைச்சரவையை நோக்கி கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கு பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருமாறு கூட்டமைப்பு ஈ.பி.டிபி.யினருக்கு அழைப்பு விடுத்த போதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு உடன்படவில்லை.
 
இதேவேளை, பலாலி ஆசிரியர் கலாசாலையை மீளத் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களை வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்த போதிலும் அதற்கும் மற்றைய தரப்பு இணங்கவில்லை.

பொதுவான ஒவ்வொரு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு இணக்கம் எதுவும் எட்டப்படாமல் கூச்சல் குழப்பம் நிறைந்ததாகவே கூட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்தத்தில் குறிப்பிடத்தக்க எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமலேயே யாழ். ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் மே மாதம் 24ஆம் திகதி மீண்டும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment