Pages

Sunday, April 27, 2014

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

Sunday, April 27, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். குடிபெயருவோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிரான்கோயிஸ் கிரிபியாயு    யே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விஜயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக இடம்பெயர்வு தொடர்பான விசேட பிரதிநிதி பியானி இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment