Pages

Thursday, April 10, 2014

ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு அமையவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை: மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண!

Thursday, April 10, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு அமையவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள்
அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ அல்லது பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களோ சட்டவிரோதமான முறையில் பட்டியலிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பயங்கரவாததிற்கு நிதி வழங்கிய மற்றும் திரட்டிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment