Pages

Saturday, April 12, 2014

வவுனியாவில் புலிகளின் உறுப்பினர்களுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை இராஜதந்திரிகளுக்கு விளக்கியதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்!

Saturday, April 12, 2014
இலங்கை::
வவுனியாவில்  புலிகளின்  உறுப்பினர்களுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை இராஜதந்திரிகளுக்கு விளக்கியதாக  மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது புலிகளின் முன்னாள் உறுப்பினரான கோபியும் மேலும் இருவரும் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
 
பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே இவர்கள் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்திருந்தார்.
கண்டியில் மாநாயக்க தேரர்களை இன்று சந்தித்த ஜெனிவா மனித உரிமை பேரவையின் விடயங்கள் தொடர்பாக சுருக்கமாக விளக்கிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்:-
 
புலிகள் மீளிணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், வடக்கில் இராணுவ பிரசன்னம் அவசியம் என அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிலும் தெரிவித்திருந்தது.
 
இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் கோபி என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுமாறு மேற்குலக நாடுகளில் கூறின.
 
அதனை செய்ய முடியாது என நாங்கள் கூறினோம். இறையாண்மை உள்ள நாடு என்ற வகையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை எமக்கு இருக்கின்றது.
 
எமது முடிவு சரியானது என்பதை தற்போது சர்வதேச சமூகத்திடம் எம்மால் தெரிவிக்க முடியும் என அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம்
செயற்படுத்தாதுவும் போருடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் மாநாயக்க தேரர்களிடம் கூறியுள்ளார்.
 
சர்வதேச விசாரணைகள் குறித்து அரசாங்கம் நம்பிக்கை கொள்ளவதில்லை. அந்த விசாரணைகள் சுதந்திரமானதாக இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
 
உள்நாட்டு செயற்பாடுகள் ஊடாக நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியும் என அரசாங்கம் எண்ணுவதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment