Saturday, April 12, 2014
புதுடெல்லி::வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதனால் தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் என்ஆர்ஐக்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் தங்கள் சொந்த தொகுதிக்கு நேரடியாக வரவேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையத்திடம் என்ஆர்ஐக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்டர்நெட் வசதி தொலை தூர கிராமங்களிலும் கிடைப்பதை தொடர்ந்து ஆன்லைன் வழியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் என்ஆர்ஐக்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 104 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட காரணத்தால், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆன்லைன் வாக்குரிமை அளித்தாலும் அதை அனைவராலும் பயன்படுத்த முடியாது.
இதனால் குழப்பம் ஏற்படும். எனவே இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டு, என்ஆர்ஐ கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது என உத்தரவிட்டது. இந்த நேரத்தில் சிறிய சலுகை காட்டினாலும் அது மிகப்பெரிய அளவில் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ஆர்ஐக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment