Sunday, April 13, 2014
சென்னை::தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.
சென்னை::தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.
சென்னை - போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.
ரஜினியின் வீட்டுக்குள் மோடியின் கார் மட்டுமே உள்ள சென்றது. பாஜகவினரின் மற்ற கார்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன.
இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் பேசியதன் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினி உடனான சந்திப்பின் புகைப்படப் பதிவு உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. 'ரஜினி உடன்' என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஏற்கெனவே 2 முறை (திருச்சி, சென்னை) தமிழகம் வந்து சென்றுள்ளார்.
தற்போது கூட்டணி இறுதியாகி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் தமிழகம் வர மோடி முடிவு செய்தார். இங்கு அவர் 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
முதல்கட்டமாக இன்று சென்னை - மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் நரேந்திர மோடி, மீண்டும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

No comments:
Post a Comment