Monday, April 14, 2014
இலங்கை::யுத்தம் காரணமாக நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த ஆயிரத்து 800 குடும்பங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறாக புதிதாக இனங்காணப்பட்ட குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்தார்.
இதனிடையே, வில்பத்து சரணாலய பிரதேசத்தின் ஒரு பகுதியில் இடம்பெயர்ந்த சில குடும்பங்கள் மீளக் குடியமர்;த்தப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பு அண்மையில் குற்றம்சுமத்தியிருந்தது.
அண்மையில் இது தொடர்பான ஆராய அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர்.
இந்தவிடயம் தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்ள எமது செய்திச்சேவை மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவிடம் வினவியது.
குறித்த இடம்பெயர்ந்த மக்கள் அனுமதியற்ற வகையிலேயே அங்கு குடியேறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வில்பத்து மீள்குடியேற்றம் தொடர்பில் எமது அமைச்சின் எந்தவித தலையீடும் இல்லை. அது மீள்குடியேற்றம் என்று கருதமுடியாது, எனினும், சிலர் அங்கு அத்துமீறி நுழைந்து வசித்துவருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் அரசாங்க அதிபர் இதுபற்றி ஆராய்ந்து வருகிறார். யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களாயின் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

No comments:
Post a Comment