Saturday, April 26, 2014
இலங்கை::நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நெடியவனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையின் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடியவன் தொடர்பிலான இணைய சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் வரிசையில் நெடியவனின் பெயரை சர்வதேச காவல்துறை இணைத்துள்ளது. அண்மையில் அரசாங்கத்தினால் நெடியவன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிகளை மீள ஒருங்கிணைப்பதில் நெடியவன் முக்கிய பங்காற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment