Monday, April 14, 2014
இலங்கை::புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரச்சாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் பிரச்சார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் காத்திரமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் ஊடகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இனவாதிகள் அல்லாத இளம் அரசியல் தலைவர்களை இலங்கை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதிகளவான தமிழ் முஸ்லிம்களை பாதுகாப்புப் படையில் அரசாங்கம் இணைத்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.போலியான செய்திகளை முறியடித்து உண்மையான தகவல்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அரச நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அண்மையில் நந்தகோபன் என்ற புலித் தலைவரை கைது செய்தமை புலிகளுக்கு எதிரான முக்கிய திருப்பு முனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் மாற்றம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் மீள யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment