Friday, April 25, 2014
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ள கடல் ரோந்து கப்பல் நேற்று இலங்கை வந்தடைந்தது. இலங்கை மற்றும் கடற்படை கொடிகளை தாங்கிய நிலையில், நேற்றுக் காலை 10.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேற்படி கப்பலுக்கு கடற்படையினரால் சம்பிரதாய முறைப்படி விஷேட வரவேற்பு வழங்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கப்பலை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றனர்.
பே கிளாஸ்’ ரகத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் 38.2 மீட்டர் நீளமும், 7.2 மீட்டர் அகலத்தையும் கொண்டது. இந்த ரோந்து கப்பலுக்கு ‘பபா’ பி- 350 என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி பெர்ட், கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு துறைமுகத்திற்கு சென்று இலங்கை கடற்படையின் ‘சயுர’ என்ற ரோந்து கப்பலை பார்வையிட்டதுடன், கடல் வழியை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டு இலங்கை கடற்படையினரும், ஆஸ்திரேலிய கடற்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.




No comments:
Post a Comment