Thursday, April 03, 2014
இலங்கை::கல்முனை மாநகர சபை பொறியியல் வேலைகள் பிரிவின் மறுசீரமைப்புக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை::கல்முனை மாநகர சபை பொறியியல் வேலைகள் பிரிவின் மறுசீரமைப்புக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத் திட்டங்களும் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீதின் மேற்பார்வையில் மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதால் அனைத்து அதிகாரிகளும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
மாநகர சபையின் அதிமுக்கிய பிரிவான பொறியியல் வேலைகள் திணைக்களம் மந்த கதியில் செயற்படுவதாக நிறைய முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்த முதல்வர், இதனை செயற்றிறன் மிக்க பிரிவாக மாற்றியமைத்து மக்களுக்கான சேவைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் கடமையாற்ற முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது விடயத்தில் எதிர்வரும் காலங்களில், தான் மிகவும் கண்டிப்புடன் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment