Saturday, April 26, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்தில் புதிதாக ஐந்நூறு பெண் பொலிஸாரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பொலிஸ் சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் பற்றக்குறையாக உள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய இங்குள்ள பெண்களை புதிதான சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளோம். அதாவது, இங்கு 400 பெண்களை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆகவும், 100 பெண்களை பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைத்துக் கொள்ளவுள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.
இதேவேளையில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்கள் தொடர்பில் பொது மக்களிடத்தே தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இத்தகைய அபிப்பிராயங்களை சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகின்றன.
அவ்வாறாயின், இங்குள்ள எந்த பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பார்வையிட முடியுமென்றும் அங்குள்ள பெண் பொலிஸாரிடம் விரும்பினால் கேட்டுப்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment