Saturday, April 26, 2014
இலங்கை::வெளிநாட்டு நிதி வழங்கல் தொடர்பான சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::வெளிநாட்டு நிதி வழங்கல் தொடர்பான சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதி சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்கு ஏதுவான வகையில் இந்த சட்ட மூலம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும், செய்தி ஆசிரியர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதன்போது பதில் வழங்கிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், 1977ம் ஆண்டுக்கு முன்பிருந்த சட்டத்தின் படி அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி வழங்கப்பட்ட தரப்பு மற்றும் அதன் செலவினங்கள் தொடர்பிலான கணக்குகள் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போது அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிவளங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஆய்வு செய்ய முடியாதிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்த சட்டத்தை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment