Pages

Wednesday, April 9, 2014

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் தான் பிரதமர்: தங்கபாலு தகவல்!

Wednesday, April 09, 2014
சென்னை::விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு அருப்புக்கோட்டை எம்.எஸ். கார்னர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
 
சோனியாவின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நல்லாட்சி வழங்கியுள்ளோம். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை இந்தியாவில் வாழுகிற 11 கோடி குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட வழி வகை செய்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களும் படிப்பதற்கும், உயர் கல்வி படிப்பதற்கும் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறோம்.
 
இந்த ஆண்டில் மட்டும் 36ஆயிரம் கோடி கல்விக்காக செலவு செய்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழகத்திற்கு ரூ.71 ஆயிரம் கோடி கடன் நிவாரணம் கொடுத்து, 4 கோடி விவசாயிகளை பாதுகாத்த கட்சி காங்கிரஸ் ஒன்றே.
 
தற்போது இந்திய மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் மதவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது.
 
விருதுநகர் பாராளுமன்ற எம்.பி.யாக இருந்த மாணிக்கம் தாகூர் 5 ஆண்டுகள் தொகுதிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவரை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ராகுல் தலைமையிலான பிரதமர் அமைச்சரவையில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக வருவார்.
இவவ்£று அவர் பேசினார்.

No comments:

Post a Comment