Sunday, April 27, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Sunday, April 27, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனிக்கப்பட வேண்டிய நாடுகளின் வரிகையில் இலங்கையை நவனீதம்பிள்ளை இணைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 2017;ம் ஆண்டு வரையில் இலங்கை விவகாரம் குறித்து கண்காணிக்;கப்பட்டு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பேரவை, இலங்கையை இந்த நான்கு ஆண்டுகளிலும் கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கொள்கைகளை உரிய முறையில் அமுல்படுத்த எதிர்வரும் நான்கு ஆண்டுகளிலும், சகல வளங்களும் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment