Tuesday, April 8, 2014

இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் புலிகளின் கைபொம்மைகளே: ராணுவம் தெரிவித்துள்ளது!

Tuesday, April 08, 2014
இலங்கை::இராணுவத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள்  புலிகள் அமைப்பின் கைபொம்மையாக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் ராணுவத்திற்கு தமிழ் யுவதிகள்; சேர்த்துக் கொள்வது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வனிகசூரியவிடம் வினவப்பட்டது.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டார்.

இலங்கையை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டதன் பின்னர் தமிழ் யுவதிகளை ராணுவத்திற்கு சேர்ந்தது உண்மையே. ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல.

அவர்கள் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்த யுவதிகளே. அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி, அவர்களை உரிய வகையில் பெண்கள் படைப்பிரிவில் சேர்த்துள்ளோம். அவர்களுக்கு எந்தவகையிலும், எந்தவொரு துன்புறுத்தலும் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் இதுவரையிலும் வந்ததும் இல்லை. வர போவதும் இல்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். அது தொடர்பிலும் வருத்தமும் அடைகிறோம். இந்தநிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் புலிகளின் கைபொம்மைகளே என தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment