Tuesday, April 8, 2014

ருவென்டி 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்கள் தாயகம் திரும்பினர்

Tuesday, April 08, 2014
இலங்கை::ருவென்டி 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்கள் சற்று நேரத்திற்கு முன்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் இலங்கை அணி வீரர்கள் கட்டுநாயக்கவில் இருந்து பழைய நீர்கொழும்பு வீதி ஊடாக காலி முகத்திடலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படவுள்ளனர். இலங்கை அணி வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் காத்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment