Pages

Saturday, April 12, 2014

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவது உறுதி:ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்!

Saturday, April 12, 2014
ஷாங்காய்::மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத் சீனாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஷாங்காய் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த மாதம் 8ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் மாயமானது.
 
இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அருகே சுமார் 2 ஆயிரம் கிமீ தொலைவில் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. விமானம் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் கடலுக்கு அடியில் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் கிடைத்துள்ளது உறுதிதான். அதை சீன கப்பல்கள் கண்டறிந்துள்ளன.இவ்வாறு டோனி கூறினார்.விபத்து குறித்து விசாரணை நடத்திய மலேசிய அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் தொடர்புகள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டன. பின்னர் விமானம் திசை திருப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர். பொதுவாக விபத்தில் சிக்கும் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சுமார் 30 நாட்களுக்கு மட்டுமே சிக்னல்கள் கிடைக்கும்.
 
கறுப்பு பெட்டியின் பேட்டரியில் உள்ள சக்தியை பொறுத்து அதில் இருந்து சிக்னல்கள் கிடைக்கும். தற்போது மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து 1 மாதத்துக்கு பின்னரும் சிக்னல்கள் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பிளைட் குளோபல் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் கிரெக் வால்ட்ரான் கூறுகையில், 'கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளது, விமான தேடலில் ஒரு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார். விமானத்தை தேடும் பணியில் சர்வதேச நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment