Pages

Tuesday, April 8, 2014

பிரிவினை கோரும் (புலி பினாமிகளின்) தமிழசுக் கட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!

Tuesday, April 08, 2014
இலங்கை::இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு ரீதியிலான ஸ்தாபிதத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணான வகையில் நாட்டின் பிரிவினையைக் கோரும் கட்சி என்று தமிழரசுக் கட்சியைப் பிரகடனப்படுத்துமாறும் அந்த மனுவில் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. களனி பொல்ஹெனயைச் சேர்ந்த எம்.கே.டொன் சந்திரசேன என்பவர் தமது சட்டத்தரணி மடுபாஷினி ராஜபக்‌ஷ மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
 
1981 மே 20 ஆம் திகதியன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அதன் யாப்பின் பிரதி ஒன்று தேர்தல் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் "சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் கீழ் சமஷ்டி அலகுகளின் கூட்டமைப்பான இலங்கை சமஷ்டிக் கட்டமைப்புக்குள் சுயாட்சி தமிழ் அரசு ஒன்றையும் சுயாட்சி முஸ்லிம் அரசு ஒன்றையும் நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையைப் பெற்றுக் கொடுப்பது இலங்கை தமிழரசுக் கட்சியின் நோக்கம் " - என உள்ளது என்று இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த யாப்பு விதிக்கு அமைய இலங்கைத் தமிழரசுக் கட்சி நாட்டில் பிரிவினையைக் கோருகின்றது என்றும் - அரசமைப்பின் ஆறாவது பிரிவின் கீழ் அக்கட்சிக்கு எதிராகவும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் உசிதமான நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்றும் - மனுவில் மனுதாரர் கோரியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் எதிர் மனுதார்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment