Tuesday, April 8, 2014

தமிழகத்தில் 5 இடங்களில் மோடி பிரசாரம்?.

 Tuesday, April 08, 2014
சென்னை::தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வட மாநிலங்களில் மட்டும் அதிக செல்வாக்குடன் திகழும் பா.ஜனதா கட்சிக்கு மோடி அலையால் தமிழகத்திலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்கியதன் மூலம் தமிழகத்திலும் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.
பிரதமர் வேட்பாளர் நரேந்திமோடி சென்னை மற்றும் திருச்சி பொது கூட்டங்களில் பேசிய போது ஏராளமான மக்கள் திரண்டனர். எனவே தமிழக தேர்தல் பிரசாரத்தில் மோடி பங்கேற்பதன் மூலம் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்று கருதுகிறார்கள்.
அதன் அடிப்படையில் மோடியிடன் பிரசார திட்டங்களை தமிழக பா.ஜனதா வகுத்து வருகிறது. பொது செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் இந்த பணியில் ஈ<டுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் வகையில் பிரசார இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. வருகிற 14 மற்றும் 15_ந் தேதிகளில் அவர் தமிழகம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரியில் டாக்டர் அன்புமணி, சேலத்தில் சுதீஷ், விருதுநகரில் வைகோ, நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்களை ஆதரித்தும் மேலும் சில பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் தயராகி வருகிறது.
கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்யும் வகையில் சென்னையில் ஒரு பிரமாண்ட பிரசார கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இது பற்றி வானதிசீனிவாசனிடம்  கூறியதாவது:_
மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது உண்மை தான். தேதி மற்றும் எத்தனை நாள் பிரசாரம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இடங்கள் பிரச்சினை இல்லை. அவரது வருகையை பொறுத்து எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் பிரசாரத்தக்கு ஏற்பாடு செய்ய தயராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment