Pages

Friday, March 28, 2014

UN ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையையும் எற்றுக்கொள்ளப் போவதில்லை: சுசில் பிரேமஜயந்த!

Friday, March 28, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையையும் எற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் விசாரணைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.
நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதுடன் இன நல்லிணக்கத்திற்கும் கேடு ஏற்படலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளது.
உள்ளக ரீதியாக விசாரணைகளை நடாத்தக் கூடிய தகுதியானவர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment