Pages

Friday, March 28, 2014

பீகாரில் பரபரப்பு - மோடி பொது கூட்டத்தில் போலீஸ் மீது செருப்பு வீச்சு

Friday, March 28, 2014
கயா:பீகார் மாநிலத்தில் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொது கூட்டத்தில் போலீசார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தடியடி நடத்தி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பீகார் மாநிலத்தில் நேற்று கயா மற்றும் கும்லா ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற பொது கூட்டங்களில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார்.
 
கயா பொது கூட்ட மேடைக்கு அவர் வருவதற்கு முன்பு அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. மேடையை சுற்றி போடப்பட்டிருந்த தடையை மீறி ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள் முன்னேறி வந்தனர். இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது செருப்புகள் வீசப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி தொண்டர்களை விரட்டி அடித்தனர்.
 
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பொது கூட்ட மேடைக்கு மோடி வந்தார். அவரது பேச்சு தொடங்கியவுடன் நிலைமை சீரடைந்தது. முன்னதாக இந்த மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் உள்ள செல்போன் கோபுரங்களை மாவோயிஸ்ட்கள் வெடிவைத்து தகர்த்தனர். இதனால் மோடியின் பொது கூட்டத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment