Wednesday, February 05, 2014
இலங்கை::இலங்கைப் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரித்தானியாவில்
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரான தமிழ்ப்
பிரபாகரன் என்பவரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இறுதி;க் கட்ட
யுத்தத்தின் போது இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி
தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
வீசா விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாக அண்மையில் தமிழ்;ப் பிரபாகரன் மீது குற்றம் சுமத்தி இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது' என்ற தலைப்பில் ஆவணப்படமொன்றை பிரபாகரன் பிரித்தானிய பாராளுமன்றில் காட்சிப்படுத்தியுள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பிற்கு அமைய, பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரபாகரன் பங்கேற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது,

No comments:
Post a Comment