Wednesday, February 05, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தேசியக்கொடி எரிக்கப்பட்டது தொடர்பில் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு-கிராண்குளம் பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற படையினர் மற்றும் பொலிஸார் தீவிர விசாரiணைகளை மேற்கொண்டுவருவதுடன் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment