Wednesday, February 5, 2014

இலங்கை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Wednesday, February 05, 2014
இலங்கை::இலங்கை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்;பட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல் ஷெட்டி, கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் கமலேஷ் சர்மா முதல் தடவையாக பேச்சுவார்த்தை நடத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சில நாடுகள் கோரி வருகின்ற போதிலும், அமைப்பு இதுவரையில் சர்வதேச விசாரணை தொடர்பில் கருத்துவெளியிடவில்லை என சாலீல் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு மித மிஞ்சிய அளவில் ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த கோரிக்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டார்கள் தாக்கப்பட்ட போது, அது தொடர்பில் குரல் எழுப்பாமை வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment