Wednesday, February 5, 2014

டுபாயில் இலங்கையின் 66வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள்!

Wednesday, February 05, 2014
இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் டுபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

தூபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் அப்துல் றஹீம் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

அப்துல் றஹீம் தனது பிரதான உரையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிரந்தரமான அமைதியை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீய சக்திகள் சீர்குழைக்க முனைவதாகவும் அதனை இலகுவாக வெற்றி கொள்வது இலங்கையர் அனைவரினதும் மத, மொழி வேறுபாடு அற்ற ஒற்றுமையின் மூலமே முடியும் என்று எடுத்துரைத்தார்.

மேலும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அண்மைய விஜயத்தின் மூலம் மேலும் நெருக்கம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment